Take a fresh look at your lifestyle.

காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் ஜெனீவா செல்ல விசா மறுப்பு

கிளிநொச்சியில் தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை நேற்று நடத்தியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த 560 நாள்களாக போராடி வருகின்றோம்

ஆனால், தமக்கான தீர்வுகிடைக்கும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் அரசு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.