Take a fresh look at your lifestyle.

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடத் தயார்: சமல்

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட தயா­ராக இருப்­ப­தாக ஶ்ரீலங்காவின் முன்னாள் சபா­நா­ய­கரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் தனது சகோ­தரர் ஒருவர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­தப்­ப­டுவார் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ ஷ இந்­திய ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­தி­ருந்தார்.

குறித்த கருத்து எம்­பி­லிப்­பிட்­டிய பிர­தே­சத்­திற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­பக்‌­ஷவிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

இதற்கு பதி­ல­ளித்த அவர், எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்­தவே மீண்டும் போட்­டி­யிட வேண்டும் என்­பது பொது மக்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. அது முடி­யாத பட்­சத்தில் அவ­ருக்கு பதி­லாக சகோ­த­ரர்­களில் ஒருவர் கள­மி­றக்­கப்­ப­டலாம். அவ்­வா­றான சகோ­த­ரர்கள் வரி­சையில் நான், கோத்­த­பாய மற்றும் பசில் ராஜ­பக்‌ஷ ஆகியோர் தயார் நிலையில் இருக்­கின்றோம்.

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் யாரை வேட்­பா­ள­ராக களமிறக்குவது என்பது தொடர்பில் பொருத்தமான தீர்மானம் ஒன்றை மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொள்வார் என்றும் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.