Take a fresh look at your lifestyle.

ஜெனிவா உப­குழுக் கூட்­டங்கள்: மனித உரிமை நிலை குறித்து ஆரா­யப்­படும்

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத்தொடர் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் ஶ்ரீலங்கா விவ­காரம் தொடர்பில் பல உப­குழுக் கூட்­டங்­களும் நடை­பெ­று­கின்­றன. சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் சர்­வ­தேச நாடுகள் என்­பன இந்த உப­கு­ழுக்­கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளன. ஏற்­க­னவே ஒரு உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் இன்னும் மூன்று கூட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளன.

எதிர்­வரும் 19 ஆம் திகதி இலங்கை மனித உரிமை நிலை­மை­தொ­டர்பில் மற்­று­மொரு உப­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. பசுமை தாயகம் அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த உப­கு­ழுக்­கூட்டம் ஜெனிவா மனித உரி­மைப்­பே­ரவை வளா­கத்தில் 15 ஆம் இலக்க அறையில் மூன்று மணி­முதல் 4 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

எதிர்­வரும் 24 ஆம் திகதி பசு­மைத்­தா­யகம் அமைப்­பினால் மீண்­டு­மொரு உப­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை மனித உரிமை தொடர்­பான இந்த உப­கு­ழுக்­கூட்டம் மனித உரி­மைப்­பே­ரவை வளா­கத்தில் 25 ஆம் இலக்க அறையில் இரண்டு மணி­யி­லி­ருந்து மூன்று மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை தமிழ் உலகம் என்ற அமைப்­பினால் எதிர்­வரும் 25 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பான உப­கு­ழுக்­கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் மனித உரிமை நிலைமை என்ற தலைப்பில் மனித உரிமைப் பேர­வையின் 15 ஆவது இலக்க அறையில் பிற்­பகல் 3 மணி­யி­லி­ருந்து 4 மணி வரை இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்த உப­கு­ழுக்­கூட்­டங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நிதிள் ,தமிழ் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் , சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொண்டு இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தவுள்ளனர்.