Take a fresh look at your lifestyle.

தவறான புரிதலைத் திருத்தின டில்லியில் நடந்த சந்திப்புகள்; மஹிந்த அறிக்கை

தவறான புரிதலை மீள் திருத்தும் வகையில் டில்லிச் சந்திப்புகள் அமைந்தன. அது மாத்திரம் அல்லாது இலங்கை – இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்திய விஜயம் அமைந்தது என ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்புக்கு அமைய கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட குழுவினர் டில் லி சென்றிருந்தனர்.

இந்த விஜயம் குறித்து நேற்று வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

“இந்த விஜயத்தின்போது இந்யப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் மிக சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்த விஜயத்தின் ஊடாகப் பல புதிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இந்தியப் பயணத்தை நிறைவு செய்து வெற்றியுடன் நாடு திரும்பியுள்ளோம்” என்றுள்ளது