Take a fresh look at your lifestyle.

தீலிபன் நினைவேந்தல் நிகழ்வில் குழ்ப்பம் செய்த போராளிகள் கட்சி!

நல்லூரில் இன்றைய தினம் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களை குழப்பும் வகையில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் செயற்பட்டிருந்தனர். நிகழ்வு ஏற்பாடு செய்தவர்களுடன் இந்த கட்சியினர் முரன்பட்டமையால் அங்கு சற்று நேரம் சலசலப்பு நிலவியது. எனினும் பின்னர் தணிந்து நினைவு நிகழ்வுகள் சுமூகமாக நடைபெற்று முடிந்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இன்றைய தினம் திலீபனது நினைவு நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில், கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக குறித்த நிகழ்வை நடாத்துவதற்கு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும், மாநகர சபையின் உறுப்பினருமான பார்த்தீபன் செயற்பட்டு வந்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய நிகழ்வுகள் காலை 10.10 மணிக்கு கரும்புலி ஒருவரின் சகோதரியின் ஈகை சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகின. நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இடையில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சிவஞானம் நினைவு இடத்திற்கு வந்து திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஊடகங்களுக்கு நினைவு தூபியில் நின்றவாறே பேட்டி வழங்கினார். இதனை
ஏற்றுக்கொள்ளாத அங்கு நின்றவர்கள் இது தொடர்பில் முரண்பட்டனர். ஒரு தியாகத்தின் தூபியில் நின்று எவ்வாறு அரசியல் பேசுவது என முரண்பட்டனர். இவ்வாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் முரன்பட்டிருந்தது.
இதன் போது ஜனநாயாக போராளிகள் கட்சியின் தலைவர் துளசி அங்கு நின்றவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் கொதிப்படைந்த ஏனையவர்கள் துளசியுடன் முரண்பட்டனர். இதற்கிடையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்
செல்வராஜா கஜேந்திரனை தனது அடியாட்களுடன் தாக்குவதற்கும் அவர் முயற்சித்திருந்தார். இதனால் அங்கு சற்று நேரம் குழப்பநிலை நீடித்திருந்தது. இதன் போது ஜனநாயக போராளிகள் கட்சி அல்லாத முன்னாள் போராளி ஒருவர் ஜனநாயகா போராளிகள் கட்சியின் தலைவர் துளசிக்கு தகுந்த பதிலை வழங்கியிருந்தார். போராளிகள் இவ்வாறான நிகழ்வுகளில் ஈடுபட கூடாது எனவும் மக்களை ஈடுபட வைத்து எங்கள் போராளிகளுக்கு மதிப்பளிப்பதே சிறந்தது
எனவும் அவர் துளசிக்கு கூறினார்.
மேலும் ஒரு புனிதமான நிகழ்வை குழப்பும் வகையில் நடந்து கொள்வது தவறு, நானும் ஒரு முன்னாள் போராளி தான், ஆனால் இவ்வாறு நிகழ்வுகளுக்கு முன் செல்வதில்லை, மக்கள் இவ்வாறான நினைவு நிகழ்வுகளில் ஈடுபடுவதையே அதிகம் விரும்புகின்றேன் அதனை கெடுத்து விடாதீர்கள் என கூறினார். இதனால் வெட்கி தலை குனிந்த துளசி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

தாரகம் செய்தியாளரால்  எடுக்கப்பட்ட பிரத்யோக காணொளி :