Take a fresh look at your lifestyle.

தேர்தலில் மஹிந்த தரப்பினரே வெற்றி பெறுவர்: எக்னமிஸ்ட் சஞ்சிகை எதிர்வுகூறல்

ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு கட்­சியே அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெறும் என்று எக்­னமிஸ்ட் சஞ்­சிகை தெரி­வித்­துள்­ளது.

ஶ்ரீலங்கா விடயம் குறித்து அச் சஞ்­சிகை மேலும் தெரி­விக்­கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:

“அடுத்த பாரா­ளு­மன்ற தேர்தல் 2020 நடுப்­ப­கு­தியில் இடம்­பெ­ற­வுள்­ளது. முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவுக் கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆச­னங்­களை கைப்­பற்றி அர­சாங்­கத்தை அமைக்கும் என நாங்கள் கரு­து­கின்றோம்.இந்த வருடம் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கட்சி பெற்ற பெரும் வெற்­றி­யா­னது அதற்­கான ஆத­ர­வையும் தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு எதி­ரான மனோ­நி­லை­யை யும் அதி­க­ரித்து வரு­வதை புலப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆளும் கூட்­ட­ணிக்குள் காணப்­படும் முறுகல் நிலை மற்றும் திற­மை­யற்ற நிர்­வாகம் கார­ண­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியோ அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ மக்­களின் நம்­பிக்­கையை மீளப்­பெற முடி­யாது. இலங்­கையின் தற்­போ­தைய ஜனா­தி­பதி மீண்டும் தேர்­தலில் போட்­டி­யி­டுவார். 19ஆவது திருத் தம் கார­ண­மாக முன்னாள் ஜனா­தி­ப­தியால் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது எனினும் பிர­தமர் பதவி உள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் நெருங்­கி­ய­வரோ அல்­ லது உற­வி­னரோ ஜனா­திபதி தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றுவார் என எதிர்­பார்க்­கின்றோம். ராஜ­பக் ஷ தரப்பு மீண்டும் உத்­வே கம் பெற்­றுள்­ளது, கடந்த தேர்­தலில் சிறிய வித்­தி­யா­சத்­தி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­றதை கருத்தில் கொள்­ளும்­போது வாக்­காளர் ஆத­ரவில் சிறிய மாற்றம் ஏற்­பட்­டாலும் ராஜ­பக் ஷ தரப்பு வேட்­பாளர் வெற்­றி­பெ­றக்­கூடும்.

அர­சியல் நிச்­ச­ய­மற்ற தன்மை அதி­க­ரித்து வரும் நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு முயற்­சிகள் கவ­னத்தை இழக்கும் என கரு­து­கின்றோம். 2020 ஆம் ஆண்டு வரை ஆட்­சி­யி­லி­ருப்­பதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக காணப்­படும் என்பதால் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கவனத்தை இழக்கலாம். தற்போதைய அரசாங் கத்தின் காலத்தில் அரசமைப்பு சீர்திருத்தங்கள் நிறைவேற சாத்தியமில்லை” எனவும் தெரிவித்துள்ளது.