Take a fresh look at your lifestyle.

பஸில், கோட்டாபயவை விடவும் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளனர்; திஸ்ஸ விதாரண

பொது எதிரணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவர்கள் உள்ளனரென லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

எனவே பஸில் ராஜபக்ஷ மற்றும் கோட் டாபய ராஜபக்ஷ குறித்து தற்போது தீர்மானிக்க முடியாது. கட்சியின் நிகழ்ச்சி நிரல் ஆவணங்களிலும் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை யயனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக எனது சகோதரர் போட்டியிடலாம் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து பொது எதிரணியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்