Take a fresh look at your lifestyle.

ஶ்ரீலங்கன் விமான கஜூ விவகாரம்: மைத்திரியை சீண்டிய நாமல்

ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சீண்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது “டுவிட்டர்’ பக்கத்தில் படத்துடன் தகவலொன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவானது அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட கஜு (மரமுந்திரிகை) தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

அந்த விமானத்தில் வழங்கப்படும் கஜுவை நாய்கூட சாப்பிடமுடியாது. அந்தளவுக்கு அது மோசமாக உள்ளது. இதை எல்லாம் அனுமதிப்பது யார் என கேட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பால் கலக்கமடைந்த விமான நிறுவனம், உயர்மட்டக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டி முக்கிய முடிவெடுத்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரியை சீண்டும் வகையில் தனது சகாவுடன் விமானத்திலிருந்து கஜு வைத்திருப்பதுபோல் படமெடுத்து அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நாமல் எம்.பி.