Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதியின் அழைப்புக்கு பதிலில்லை; தூதுவரும் 5 அதிகாரிகளும் மீள அழைப்பு

தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமைக்காக வியன்னாவிலுள்ள ஆஸ்திரியாவின் ஶ்ரீலங்கா தூதுவர் பிரியாணி விஜயசேகரவை மீள அழைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். து◌ாதுவரைவிட தூதரகத்தின் ஐந்து மூத்த மூத்த அதிகாரிகளும் ஜனாதிபதி சிறிசேனவின் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காமைக்காக திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பதிலாக தூதரகத்திற்கு புதிய தூதர் மற்றும் அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், ஜனாதிபதி சிறிசேன எதற்காக இவ்விதம் அவசரமாக வியன்னா தூதரகத்துக்குத் தொடர்பை ஏற்படுத்தினார் என்றோ, வெளிவிவகார அமைச்சின் மூலமாக அன்றி நேரடியாக எதற்காகத் தொடர்புகொண்டார் என்றே தெரிவிக்கப்படவில்லை.