Take a fresh look at your lifestyle.

ஜெனோவா நகரில் தமிழின அழிப்பின் கண்காட்சி ஊர்தி போராட்டம்!

இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் நேற்றைய (15) கவன ஈர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. கவனர்ப்பு நிகழ்வு பொதுச்சுடர் அகவணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.

 

 

இங்கு வாழ் பல தமிழர்கள் வருகை தந்து இந்தப் போராட்டத்திற்கு அமோக ஆதரவு தந்திருந்தார்கள். இத்தாலி நாட்டு மக்களிற்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டதுடன் எமது நீதிக்கான பயணம் பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது. கண்காட்சி ஊர்தி இப்போது தனது பயணத்தை சுவிஸ் நாட்டிலுள்ள Lausanne நகரை நோக்கி தொடர்கிறது.