Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் மின் தடை இல்லை -தங்கமணி.!

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், மின்சாரம் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள் நிச்சயம் ஏமாந்து போவார்கள்.  தமிழகத்தில் மின்வெட்டு வரவே வராது என கூறினார்.
தமிழக மின்துறை தனியார் மயமாக்கப்பட உள்ளது என நல்லகண்ணு கூறிய புகாருக்கு அது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், மேட்டூர், வடசென்னையில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது.
12 வேகன்கள் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளது என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.