Take a fresh look at your lifestyle.

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு சுவிஸ் , Lausanne நகரில் கவன ஈர்ப்புப்போராட்டம்!

இன்றைய கவன ஈர்ப்புப் போரட்டம் சுவிஸ் நாட்டிலுள்ள Lausanne நகரமத்தியில் இடம்பெற்றது.

வான் ஊர்தியும் ஈருளி கவனஈர்ப்புப் போராட்டமும் மீண்டும் இந்த நகரில் இணைந்து கொண்டன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்டுருந்த இந்த கவன ஈர்ப்பு காலை 09:00 மணி தொடக்கம் 10:00 மணிவரை இடம்பெற்றது. வான் ஊர்தியும் கவனஈர்ப்பு ஈருளிகளும் தற்போது ஜெனிவா நகரை நோக்கி தமது பயணத்தை தொடங்கியுள்ளன.