Take a fresh look at your lifestyle.

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு உதைபந்தாட்ட போட்டி.!

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவாக கடந்த சனிக்கிழமை (08/9/2018) அன்று 378 Massey Road Auckland New Zealand இல் உதைபந்தாட்ட சுற்று போட்டியானது, சிறப்பாக நடைபெற்றது.

ஆடவர் மற்றும் சிறுவர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற சுற்று போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்ற வீரர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர். இப் போட்டிகளை காண ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து தங்கள் ஆதரவை நிறைவாக தந்துதவினர்.
தொடர்ந்து ஆடவர்களுக்கான பிரிவில் பங்கெடுத்த ATSC மற்றும் OSCA sports club அணிகளானது தலா 2-4 என்ற புள்ளிகள் பெற்றுக்கொண்டு, OSCA sports club அணியானது வெற்றியை தனதாக்கியது. போட்டியின் சிறப்படக்காரராக திரு.நவீன் தெரிவு செய்யப்பட்டார்.


பின்னர் சிறுவர்களுக்கான பிரிவில் பங்கெடுத்த ATSC மற்றும் OSCA sports club அணிகளானது தலா 3-2 என்ற புள்ளிகள் பெற்றுக்கொண்டு ATSC அணியானது வெற்றியை தனதாக்கியது. போட்டியின் சிறப்படக்காரராக திரு கிப்சன் தெரிவு செய்யப்பட்டார்
நிறைவாக தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது தியாகத்தின் வலிமை அனைவராலும் நினைவுகூரப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றன.