Take a fresh look at your lifestyle.

பறிக்கப்படுமா “பீல்ட் மார்ஷல்’? கலக்கத்தில் பொன்சேகா

ஶ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமிருந்து “பீல்ட் மார்ஷல்’ பட்டத்தைப் பறிப்பதற்கு அரச தரப்பில் பேச்சுகள் இடம் பெற்றுள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக் காலமாக சரத் பொன்சேகா பாதுகாப்புத் தரப்புப் பற்றியும், இராணுவத்தளபதி குறித்தும் முன்வைக்கும் விமர்சனங்களால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே அரச தரப்பில் பொன்சேகாவுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

பொன்சேகா தற்போது அமைச்சராக இருந்தாலும் பீல்ட் மார்r தரம் வகிக்கும் அவர் வெளியிடும் கருத்துக்கள் இராணுவத்தின் சார்பில் தெரிவிக்கும் கருத்துக்களாகவே அமையும். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல’ பதவியை அல்லது அமைச்சர் பதவியை உடன் பறிமுதல் செய்யவேண்டும் என்று ஜனாதிபதியிடம் அரசிலுள்ள ஒரு தரப்பினர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், பொன்சேகாவிடமிருந்து “பீல்ட் மார்ஷல்’ பட்டத்தைப் பறிப்பதற்கு அரச தரப்பில் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. பீல்ட் மார்ஷல்’ பட்டத்தை பொன்சேகாவிடமிருந்து பறிக்க வேண்டுமென்றால் ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிக்கையயான்று வெளியிடப்படவேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசகர்களிடம் ஆலோசனை கோரியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இறுதிக் கட்டப்போரை வழி நடத்திய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கினார். அதில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்.

2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அவருக்கு பீல்ட் மார் ஷல் பட்டம் வழங்கப்பட்டது. இலங்கையில் முதலாவது பீல்ட் மார் ஷல் பட்டம் பெற்ற இராணு வத் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவச் சீருடையில் அரச நிகழ்வுகளில் பங்கேற்பது, அதிரடிப்படைப் பாது காப்பு என முக்கிய சில சலுகைகளை இப்பதவியால் அவர் பெற்றுள்ளார்.