Take a fresh look at your lifestyle.

மறவன்புலவு சச்சியை கொழும்புக்கு அழைத்த பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவு

 

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தந்தை எதிர்வரும் 18 ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் (TID) விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துள்ளனர்.

சிவசேனை அமைப்பை ஆரம்பித்தமை மற்றும் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு அவருக்கு அறிவித்துள்ளது.

இந்த விசாரணை தொடர்பான அழைப்பு துண்டு நேற்றைய தினம் அவரிடம் வீட்டில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.