Take a fresh look at your lifestyle.

லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

தமிழீழத்தின் “இதயபூமி” என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி  சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி” லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய (06) மாவீரர்களின் 27 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் மறவர்கள்”

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி” லெப்.கேணல் ஜஸ்ரின் (பொன்னுச்சாமி பாஸ்கரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மில்ராஜ் (வைரமுத்து விஜேந்திரன் – கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை)
வீரவேங்கை அறிவழகன் (சுப்பிரமணியம் வேலாயுதம் – கிளிநொச்சி)
வீரவேங்கை லோறன்ஸ் (முருகேசப்பிள்ளை தபேந்திரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுரேன் (சந்திரசேகர் சுரேஸ்குமார் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குகநேசன் (ஆறுமுகம் ராசன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”