Take a fresh look at your lifestyle.

அம்­பாந்­தோட்­டையில் சீனத்தளம் அமை­யாது : அமெ­ரிக்­கா­வுக்கு விளக்­கி­யது ஶ்ரீலங்கா

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் வெளி­நாட்டு இரா­ணுவத் தலை­யீ­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­டாது என்று அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­துக்கு, ஶ்ரீலங்கா அர­சாங்கம் விளக்­க­ம­ளித்­துள்­ள­தாக, ஏ.எவ்.பி. செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்­தியப் பெருங்­கடல் தீவு நாட்டில், பீஜிங்­கினால் குத்­த­கைக்குப் பெறப்­பட்ட, கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த துறை­முகம் விரைவில் சீனாவின் முன்­ன­ரங்க இரா­ணுவத் தள­மாகக் கூடும் என்று அண்­மையில் அமெ­ரிக்­காவின் துணை ஜனா­தி­பதி மைக் பென்ஸ் கூறி­யி­ருந்தார்.

இதனை ஶ்ரீலங்கா அர­சாங்கம் நிரா­க­ரித்­துள்­ள­தாக ஏஎவ்பி செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அம்­பாந்­தோட்­டையில், வெளி­நாட்டு இரா­ணுவத் தலை­யீ­டுகள் இருக்­காது என்றும், இது குறித்து அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­துக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பிர­த­மரின் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது,

எமது கடற்­ப­டையின் தென்­ப­குதி தலை­மை­யகம், அம்­பாந்­தோட்­டைக்கு நகர்த்­தப்­பட்டு, துறை­மு­கத்தின் பாது­காப்பு அதன் கீழ் கொண்டு வரப்­படும் என்று, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க லண்­டனில் தெரி­வித்த கருத்­தையும் அவ­ரது பணி­யகம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக்­கா­லத்தில் சீனா­விடம் பெற்ற கடன் மூலம் கட்­டப்­பட்ட அம்­பாந்­தோட்டை விமான நிலை­யத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான வணிக உடன்பாட்டை செய்து கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.