Take a fresh look at your lifestyle.

தமிழ்நாடு மக்கள் காப்பக பிரதிநிதிகள் தியாக தீபம் திலிபனுக்கு அஞ்சலி செலுத்தினர்

 

தமிழ்நாடு மக்கள் கண்காணிப்பகம் சேர்ந்த பிரதிநிதிகள் இன்றைய தினம் காலை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்றைய தினம் வடக்கிற்கு வருகை தந்திருந்த அவர்கள், மன்னர் மாவட்டத்தில் சதொச வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழிக்கு நேரில் சேர்ந்து பார்வையிட்டிருந்தனர்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அவர்கள், காந்திய தேசம் என சொல்லப்படும் இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து ஒரு சொட்டு நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணா நோன்பிருந்து உயிரை மாய்த்து கொண்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள நல்லூருக்கு சென்று அங்கு திலீபனின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதன் போது சட்டத்தரணி கனகரடம் சுகாசும் உடனிருந்தார்.

இதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று அங்கு வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பல அமைப்புக்களுடன் அவர்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர். இந்த குழுவில் தமிழ் நாட்டை சேர்ந்த மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

குறிப்பு:>