Take a fresh look at your lifestyle.

பொதுக் கிணற்றுக்கு பூட்டிய மின்விளக்கை வீட்டுக்கு மாற்றிய தவிசாளர்

 

வடதமிழீழம் சாவகச்சேரி உப்புக்கேணி வீதி பெரியமாவடி சித்திவிநாயகர் கலைமன்றத்திற்கு முன் காணப்பட்ட பொதுக்கிணறுக்கு ,நகரசபை உறுப்பினர் திரு யோ. ஜெயக்குமார் அவர்களால் மின்விளக்கு பொருத்தப்பட்டது.

அவரால் பொருத்தப்பட்ட மின் விளக்கு இரண்டு நாட்களில் தவிசாளரின் உத்தரவுக்கமைய கழற்றி அண்மையில் உள்ள ஒருவரது வீட்டு வாசலுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  அதிருப்தி வெளியிட்ட சனசமூக நிலையத்தினர் “பொது கிணற்றுக்கு மின் விளக்கு முக்கியமா அல்லது தனிப்பட்ட ஒருவரின் வீட்டுக்கு மின் விளக்கு முக்கியமா? இது ஒரு தவிசாளர் செய்யும் வேலையா? ஒரு வீதி விளக்கு பூட்டுவதற்கே இப்படி குழப்பகரமான வேலைகளை செய்யும்  இவர்கள் எங்கே மக்கள் சேவை செய்யப் போகிறார்கள். தகுதி அற்றவர்களின் கைகளில் அதிகாரம் போனால் இப்படித்தான்” என தெரிவித்தனர்.

இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்டத்தரணிகளை உதவியை நாடவுள்ளதகவும் தெரிவித்துள்ளனர்

குறிப்பு:>