Take a fresh look at your lifestyle.

மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 

ஒலுவில் துறைமுகத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளவதற்கு எடுக்கப் படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று பிற்பகல் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒலுவில் சந்தை சதுக்கத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதி ஊடாக, துறைமுக பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒலுவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனம், சமூக சேவை நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போரட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒலுவிலை அழிக்காதே, அரசே எங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடு, பாரபட்சம் காட்டாதே, எங்களை காப்பாற்று போன்ற சுலோபங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.