Take a fresh look at your lifestyle.

ரணில் புதுடில்லிக்கு அவசர பயணம்; மோடியுடன் முக்கிய பேச்சு

ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்காக திங்கட்கிழமை இந்திய தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில், இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது, அரசியல் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.