Take a fresh look at your lifestyle.

10 மாதங்களுக்குச் சபையில் எனக்கு பேச்சுரிமை மறுப்பு: சிவசக்தி குற்றச்சாட்டு

“ஆட்சிமாற்றத்தின் பின்னர் பரந்துபட்ட ஜனநாயகம், நல்லாட்சி என்று பேசப்படும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பேச்சுரிமை சபைக்குள்ளேயே மறுக்கப்படுவதை எந்த வகைக்குள் கொள்வது என்ற கேள்வி எமக்கு எழுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 10 மாதங்களுக்கும் மேல் சபையில் எனக்கான பேச்சு நேரம் மறுதலிக்கப்பட்டு வருகிறது. இது எனது சிறப்புரிமையை மீறும் செயல்.”

இவ்வாறு நேற்றுச் சபையில் தெரிவித்தார் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

நாடாளுமன்றத்தில் நேற்றுத் தனது சிறப்புரிமை மீறல் தொடர் பில் வெளிப்படுத்தியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“வன்னித் தேர்தல் மாவட்டத்தில் மக்களின் ஆணை பெற்று நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். எமது ஈழமக்கள் புரட்சிகர முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகப் பங்காளிக் கட்சியாகும். அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமாக நான் பதவி வகிக்கிறேன். கடந்த தேர்தலில் எமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து இலங்கை தமிழர சுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிருந்தது.

அதன் பின்னர் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட புதிய அரச மைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றிய பயிற்சிப்பட்டறை ஒன்றில் எமது கட்சி பங்கேற்கவில்லை. அது எமது கட்சியின் தனிப்பட்ட முடிவு. அவ்வாறிருக்கையில், இடைக்கால அறிக்கை சம்பந்தமான விவாதம் உட்பட அதற்குப் பின்னரான முழு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கான நேர ஒதுக்கீட்டை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப் பின் தலைவருமான சம்பந்தன் வழங்குவதைத் தவிர்த்து வருகின்றார் என்பதை நான் ஏற்கனவே பல தடவை கள் தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இருப்பினும் அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. போரின் உக்கிரத்துக்கு முகங் கொடுத்த வன்னி வாழ் மக்களின் குரலாக – அவர்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்கான பேச்சுரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். அதுமட்டுமன்றி நான் பிரதிதிநிதித்துவப் படுத்தும் மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை, கோரிக்கைகளை, எதிர் பார்ப்புக்களை வெளிப்படுத்த இடமளிக்காது அவர்களின் குரலை நசுக்கும் ஒரு செயற்பாடகவே கருதவேண்டியுள்ளது.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் பரந்துபட்ட ஜனநாயகம், நல்லாட்சி என்று பேசப்படும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பேச்சுரிமை சபைக்குள்ளேயே மறுக்கப்படுவதை எந்த வகைக்குள் கொள்வது என்ற கேள்வி எமக்கு எழுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பத்து மாதங்களுக் கும் அதிகமாகச் சபையில் எனக்கான பேச்சு நேரம் மறுதலிக்கப்பட்டு வருகின்றது. இது எனது சிறப்புரிமையை மீறலாகும்.

உறுப்பினர்களுக்கான நேர ஒதுக்கீட்டைச் சபாநாயகர் என்ற அடிப்படையில் தாங்கள் பெற் றுக்கொடுப்பதற்கு உரித்துடைவராகின்றீர்கள். சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வரலாறும் சபைக்கு உள்ளது. ஆகவே தாங்கள் எந்தவொரு கட்சியையும் சாராது நடுநிலைமையுடன் செயற்பட்டு வருகின்றவர் என்ற அடிப்படையில் இவ்விடயம் சம்பந்தமாக உரிய கவனம் எடுத்து விரைந்து பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

குறிப்பு:>