Take a fresh look at your lifestyle.

6 மாதத்தில் 8 மின் விளக்குகள்: வெளிவந்த சாவகச்சேரி நகரசபையின் பணித்திறன்

 

மக்களுக்கான சேவை வழங்கவே சபைக்கு வந்திருக்கின்றோம். அதைவிடுத்து தேனீர் அருந்திவிட்டு போக வரவில்லை கடந்த 09.10.2018 அன்று நடைபெற்ற சாவகச்சேரி நகர சபை மாதாந்த பொதுக்கூட்டத்தில் கௌரவ உறுப்பினர் ம. நடனதேவன் சபையில் தெரிவிப்பு.

தொடர்ந்து பேசுகையில் கடந்த 6 மாத காலத்தில் வட்டாரத்தில் 8 மின் விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்ட வேலைத்திட்டம் மாத்திரம் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் இதுவரை எதுவித நடைவடிக்கையும் நடைபெறாமல் இழுத்தடிப்பு செய்கிறீர்கள்.

அத்துடன் நகர சபை நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது, செயற்படுத்துவது செயலாளரே தவிர அதன் உத்தியோகத்தர்களை தவிசாளர் தன்னிச்சையாக தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க முடியாது. இதனால் செயலாளருக்கு தெரியாமல் தவிசாளரும், தவிசாளருக்கு தெரியாமல் செயலாளரும் தனித்தனி நிர்வாகம் நடத்தல் கூடாது.

அண்மையில் உதயசூரியன் கடற்கரை வீதியை புனரமைக்க பல காரணங்களை கூறிவந்திருப்பினும் ஒரு சில உறுப்பினர்களின் தனிப்பட்ட முயற்சியால் நகர சபையின் வாகனங்களை பயன்படுத்தி அந்த வீதிக்கு கிறவல் கொட்டப்பட்டு சீரமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இருந்தபோதும் இடைநடுவில் அதனை குழப்பி மிகுதி வேலைகளை செய்யாமல்விடுபட்டுள்ளது.

வெறுமனே பத்திரிகைகளுக்கும், இணையத்தளங்களிற்கும் செய்திகளை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது மக்களிற்கான சேவைகளை மனதால் வழங்க முன்வாருங்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சபையை திறம்பட நடத்த முடியாவிட்டால் கடிதம் மூலம் உள்ளுராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்திவிட்டு வெளியேறலாம். இப்படி நெண்டி சாட்டுக்களை முன்வைத்து சபையை பிழையாக வழிநடத்தவும், நிர்வாகத்தில் தலையீடு செய்யவும் தேவையில்லை என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.

குறிப்பு:>