Take a fresh look at your lifestyle.

அச்சுவேலி எலும்புக்கூடு; நீதிவான் நேரில் விசாரணை

அச்சுவேலிப் பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின் கம்பம் நடுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது அங்கு மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். நேற்றுச் ச ம் பவ இட த்துக்கு மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

நேற்றும் அந்தக் குழி மேலும் தோண்டப்பட்டபோது மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. கால், கை, விரல் மண்டையோடு பகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

மின் கம்பம் நாட்டும் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ளவும் நீதிவான் அனுமதியளித்தார். மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்