Take a fresh look at your lifestyle.

அரசியல் கைதிகளின் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறிய சுமந்திரன்!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிங்கள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவினை முன்வைக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் அரசியல் கைதிகள் தொடர்பில் முடிவொன்றினை அறிவிக்கவுள்ளதாகவும் மைத்திரி  தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அவர்களுக்கு மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்ககளை துரிதப்படுத்தி விடுதலை செய்யுமாறு உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவொன்றினை முன்வைப்பதாக  இனப்படுகொலையின் முக்கிய மையம்  மைத்திரிபால சிறிசேன நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் கூடிய சிங்கள நாடாளுமன்றில் சிங்கள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தையொன்றினை நடாத்தியுள்ளனர்.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிங்கள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் இதுவரை நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமையை சுட்டிக்காட்டி, குறித்த விடயத்திற்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினை எடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த  மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் பேச்சு நடத்தி தீர்வொன்றினை எட்டலாம் என உறுதியளித்துள்ளார்.

மைத்திரி வழங்கிய உறுதிமொழியினையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை தொடர்பு கொண்டு மைத்திரியின்  உறுதிமொழியை தெரிவித்துள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போராட்டத்தைக் கைவிடுமாறும் கோரியுள்ளார்.

குறிப்பு:>