Take a fresh look at your lifestyle.

இடைக்கால அரசமைப்பதற்கு சு.கவின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பு

இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள் என்று கூட்டு எதிரணியின் எம்.பியானகுமார வெல்கம தெரிவித்தார். அத்துடன், இடைக்கால அரசில் தான் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என்றும்அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடைக்கால மேற்பார்வை அரசமைப்பதற்கு கூட்டு எதிரணி முயற்சித்து வருகின்றமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுகுப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீது எனக்கு அக்கறை இருக்கின்றது. அதன் தலைவர் மீது எனக்கு விருப்பமில்லை. எனவே, இடைக்கால அரசமைக்கும் முயற்சிக்கு நான் எதிர்ப்பு. எனினும், அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் கூட்டு எதிரணிக்கு ஆதரவாக வாக்களிப்பேன். ஆனாலும் இடைக்கால அரசில் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டேன். எதிரணி பக்கமே அமர்ந்திருப்பேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.