Take a fresh look at your lifestyle.

ஈழத்தமிழர் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல்!

தமிழகம் – தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டியில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த  நபர் ஆத்தூர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர் கருத்து தெரிவிக்கையில்,

“நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில், எனது குடும்பத்தாருடன் கடந்த 2006ம் ஆண்டு முதல் தங்கியுள்ளேன். தற்போது சென்னையில் பெயிண்டராக பணியாற்றி வருகிறேன்.

எனது குழந்தைகளுக்கு பள்ளியில் சில சான்றுகள் தர வேண்டியிருந்ததால், சில நாட்களுக்கு முன் நாகியம்பட்டி வந்தேன். அப்போது உறவினர் இருவரை உடன் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தேன்.

நாகியம்பட்டி முகாமில் உள்ள சிமியோன் என்பவர், இவர்களை ஏன் அழைத்து வந்து உடன் தங்க வைத்துள்ளாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தம்மம்பட்டி காவல்நிலையத்தில்  தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் முகாமிற்கு வந்த தம்மம்பட்டி காவல்துறையினர் , என்னிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளாது காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், தம்மம்பட்டி காவல்  நிலையத்திற்கு அழைத்து சென்று தடுத்து வைத்தனர்.

பின்னர் இனி இதுபோல் நடக்க மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். காவல்   துறை தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறேன், எதற்காக என்னை காவலர்கள்  தாக்கினார்கள் என தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்,

மேலும் காவல்துறையினர் தெரிவிக்கையில் 

‘நாகியம்பட்டி அகதிகள் முகாமில் சிமியோன் என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் பேரிலேயே ஜெரின்சுபாஸ்கரன் என்பவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தோம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு :

தமிழகத்தில்  வேற்றினத்தார் சுதந்திரமாக  வாழும்  சுழலில் ஒரே இனத்தை சேர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டும்  விசாரணை என்ற ரீதியில்  நசுக்கப்பட்டுவது திட்டமிட்ட இனப்படுகொலையின் தன்மையை காட்டுகிறது சிங்கள அரசின் கரங்களாக இந்தியா செயல்படுகிறது என்பதே நிதர்சனம் .இதே நேரம் தமிழக கா(ஏ)வல்துறை   எச் .ராஜா ,எஸ்.வி சேகர்  போன்ற குற்றவாளிகளை கைது செய்ய திராணியற்றவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்

 

குறிப்பு:>