Take a fresh look at your lifestyle.

ஐந்தாவது நாளாக தொடரும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபயணம்.!

“அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்”
அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம்.  இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின்உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வட தமிழீழம்  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்   பல்கலைக்கழக முன்றலில் இருந்து தமிழீழ மாவட்டங்களான கிளிநொச்சி வவுனியா ஊடாக  இலங்கையின் அநுராதபுர சிறைச்சாலை வரை  தொடங்கியது  நடைபயணம்

குறித்த நடைப்பயணத்தின் ஐந்தாவது நாளான இன்று யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபயணம்  மவாச்சியில் இருந்து அனுராதபுரசிறைச்சாலை நோக்கி தொடர்கின்றது .அணைத்து தமிழ் உறவுகளையும் தம்முடன் இணைத்து  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வருமாறும் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்