Take a fresh look at your lifestyle.

காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டவர் சாட்சியம் அளித்தார்

 

 

வட தமிழீழம், யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார் அந்த  இளைஞர் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளித்தார். அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டது.

 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமது மகன் இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் நேரில் கண்ட பெண் ஒருவர் பலாலி இராணுவ முகாமுக்கு வந்து வாக்குமூலம் வழங்கினார் என்றும் அந்தப் பெண் தற்போது இறந்துவிட்டார் என்றும் இளைஞன் தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.அதேவேளை வழக்கு இன்று விளக்கத்துக்கு வந்த போது, 5ஆவது பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி நீதிமன்றில் முன்னிலையானார்.

 

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் மனுதாரரால் முற்படுத்தப்பட்ட கண்கண்ட சாட்சியிடம் அரச சட்டவாதி குறுக்குவிசாரணையை முன்னெடுத்தார்.யாழ்ப்பாணம் அரியாலை துண்டி இராணுவ முகாமுக்குள் இளைஞர் சென்றதை அவதானித்தேன். அவரை மறுநாள் காலை காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்” என்று குறுக்குவிசாரணையின் போது கண்கண்ட சாட்சி சாட்சியமளித்ததார்.

 

இதுதொடர்பில் எங்கேயாவது சத்தியக்கூற்று வழங்கியுள்ளீர்களா? என்று சாட்சியிடம் அரச சட்டவாதி கேள்வி எழுப்பினார். சாட்சி இல்லை என்று பதிலளித்தார். தொடர்ந்து இளைஞனின் தாயாரிடமும் தந்தையாரிடமும் சாட்சியம் பெறப்பட்டது.
“எனது மகன் துண்டி இராணுவ முகாமுக்குள் செல்வதை பெண் ஒருவர் கண்டார். அவர் அது தொடர்பில் எங்களுடன் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு வந்து வாக்குமூலம் வழங்கினார். எனினும் அவர் தற்போது இறந்துவிட்டார்” என்று இளைஞனின் தாயார் சாட்சியமளித்தார்.இந்த நிலையில் வழக்கு தொடர் விளக்கத்துக்காக எதிர்வரும் டிசெம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னணி.

குறிப்பு:>