Take a fresh look at your lifestyle.

பாடசாலையில் திருடிய சிறுவனும் இளைஞனும் கைது

 

வடதமிழீழம், ஊர்காவற்துறையில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் ஒருவரும் 27 வயதான ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கடந்த 8ம் திகதி பாடசாலை ஒன்றின் அலுவலகத்தின் கூரையை பிரித்து உள்ளே இறங்கி, கணினி, ஆய்வுகூட உபகரணங்கள் உட்பட பல்வேறு பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்