Take a fresh look at your lifestyle.

போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து பல்கலைக்கழகம் திரும்பும் மாணவர்கள் .!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உணவுதவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் உடல்நிலை மிகமோசமான கட்டத்தை அடைந்து வருகின்றது இவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கால் நடையாக அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நாம் இன்று காலையில் அவர்களோடு கைகோர்த்து அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபயணத்தில் இணைந்திருந்தோம் பல்கலைக்கழக மாணவர்களின் தயவான வேண்டுகோளை ஏற்று உணவுதவிர்ப்பில் ஈடுபட்டு வந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர் தமக்கான உரிய தீர்வு கிடைக்க பெறாது போனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு கிழக்கு பல்கலைக்கழகம் நோக்கி வந்துகொண்டிருக்கின்றோம்.

குறிப்பு:>