Take a fresh look at your lifestyle.

மஹிந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நாங்கள் காணாமல் போயிருப்போம்; ஹிருணிகா பிரேமசந்திர

மஹிந்த ராஜபக்rவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் முறையற்ற விதத்தில் துமிந்த சில்வா இன்றும் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்திருப்பார். நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

நல்லாட்சி அரசில் நீதித்துறை எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனப்படுத்தப் பட்டுள்ளது என்பது மீண்டும் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பு:>