Take a fresh look at your lifestyle.

யாழ் வந்த தமிழக அறிஞர் குழு முதலமைச்சருடன் பேச்சு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தமிகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் நேற்றுக் காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். இக்குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியல் இராமு மணிவண்ணன் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

மேற்படி குழுவில் தமிழ்நாடு சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை வழக்கறிஞர் பெண்ணிய செயற்ப்ட்டாளர் பாண்டிமாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பு:>