Take a fresh look at your lifestyle.

ஶ்ரீலங்காவில் சத்திர சிகிச்சைக்கா காத்திருப்போர் 35000 பேருக்கு மேல்

 

ஶ்ரீலங்காவின் பிரதான வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் 35,000 ற்கும் மேற்பட்டோர் காணப்படுவதாக அன் நபட்டின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் அந்த எண்ணிக்கை கடந்த 3 வருடங்களில் எவ்வாறாக மாற்றமடைந்துள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன:- இன்றும் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6234 பேரும், கராப்பிட்டிய வைத்தியசாலைலயில் 8960பேரும் , யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 4395 பேரும் , கண்டி வதத்தியசாலையில் 5973 பேரும் , பதுளை வைத்தியசாலையில் 872 பேரும் , அனுராதபுரம் வைத்தியசாலையில் 5830 பேரும் இருப்பதுடன் அம்பாறை வைத்தியசாலையில் காத்திருப்போர் பட்டியல் கிடையாது.

2017ஆம் ஆண்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 5793 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததுடன் 68,157 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு:>