Take a fresh look at your lifestyle.

இடைக்கால அரசை அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது: பேச்சுக்கள் தோல்வி

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வது தொடர்பில் சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது கொள்ளுங்கள் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் இணக்கம் எதுவும் காணப்படாத நிலைமை இல்லையே காபந்து அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வது என்ற யோசனை இப்போது கை விடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கால்பந்து அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. மைத்திரிபால சிறிசேனாவும் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்பிபி சேனநாயக்காவின் இல்லத்தில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருந்தார்கள்.

இருந்தபோதிலும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது எந்த வித இறுக்கம் ஏற்படாத நிலைமையில் கால்பந்து அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்ள முயற்சி கைவிடப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து அமைச்சரவையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் இந்த முயற்சியை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு கடுமையான அழுத்தத்தை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைவிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்தவாரம் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின ்
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கூட்டு எதிரணியுடன் எந்தவித உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டாம் என ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனைவிட கூட்டணி அமைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முன்வைத்த நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை என மைத்திரி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே இவ்வாறான கூட்டு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு மஹிந்த தரப்பு முற்பட்டதாகவும் மைத்திரி தரப்பு சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மைத்திரி தரப்பு கைவிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது

குறிப்பு:>