Take a fresh look at your lifestyle.

அங்கயனும் சிவஞானமும் கலந்து கொண்ட நுணாவில் குளம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

 

வடதமிழீழம், யாழ்ப்பாணம் நுணாவிலில் அமைந்துள்ள நுணாவில் குளம் தூர்வாரி மீண்டும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த குளத்திற்குச் செல்வதற்காக புதிய வீதியும் அமைக்கப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு, நுணாவில் முருகன் கோயில் முன்றலில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், கமத்தொழில் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.

நுணாவில் மக்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்துவந்த இக்குளம், யுத்த காலத்தில் பெருமளவில் சேதமடைந்தது. அதற்கான வீதியும் பற்றைக்காடாகி மக்கள் செல்லமுடியாத நிலை காணப்பட்டது. இந்நிலையில், குறித்த குளத்தை தூர்வாரி, புனரமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.