Take a fresh look at your lifestyle.

கடன் நிவாரண அறிவித்தல் தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரனை.!

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட கடன் நிவாரண அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் ஒத்திவைப்பு பிரேரனை கொண்டுவரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.

நேற்று 22.10.18  பிற்பகல்  வட தமிழீழம் முல்லைத்தீவு நகர்பகுதியில் சிவில் சமூக வலையமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவை சந்தித்து வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வதியும் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண்நிதிக் கடனக்ளுக்கான கடன் நிவாரணம் தொடர்பான மகஜர் ஒன்றையு கையளித்துள்ளனர்
இதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..
அபிவிருத்தி நிதி சுற்றுநிருபம் (01/2018) 08.08.2018 அன்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களைபெற்றவர்களிடம் ஒரு கடனை கழித்துவிடுவது என்ற திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாதம் காலமாக கடனை செலுத்தாதவர்களிடம் மட்டும் ஒருலட்சம் ருபாயை கழித்துவிடுவது என்ற நிலைப்பாடு அதில் காணப்படுகின்றது.

இதனால் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுகின்றார்கள்.ஏனெனில் பல்வேறு அழுத்தமான காரணங்களினால் மாதம் கடன்களை செலுத்தாத பெண்கள் மிகக்குறைவாகவே முல்லைத்தவில் காணப்படுகின்றார்கள்.
இதனால் இந்த திட்டத்தினால் இந்த மாவட்டத்தில் கடன்பெற்ற பெரும்பாளான பெண்கள் பயனடையாத நிலையே காணப்படுகின்றது.

ஆகவே இந்த திட்டத்தை மாற்றிஅமைக்கவேண்டும் என்ற முக்கியகோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை சிவில் சமூக வலையமைப்பினர்  இன்று கையளித்துள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது கௌரவ நிதிஅமைச்சரிடம் இந்த கட்டுப்பாட்டை நீக்கிவிடுமாறு கோரிக்கை விடுவதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் ஒரு ஒத்திவைப்பு பிரேரனை கொண்டுவந்து இவர்களுக்கு இதில் இருந்து விலக்களிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்