Take a fresh look at your lifestyle.

காணி விடுவிப்பு சிக்கலுக்கு அரசியல் தீர்மானமே தேவை – சிவசக்தி ஆனந்தன்

 

அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலமே காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் காணி விடுவிப்பு தொடர்பில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே சிவசக்தி ஆனந்தன் இதனை குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நிபந்தனையுடனான பேச்சுவார்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.