Take a fresh look at your lifestyle.

கீரிமலையில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பிரபல பாடசாலை மாணவன்

 

வடதமிழீழம், கீரிமலை நகுலேஸ்வரம் சைக்கிள் பாதுகாப்பு நிலையப்பகுதியில் மோட்டார் சைக்கிளை கள்ளத் திறப்பு போட்டு திறக்க முற்பட்ட யாழ் நகர்ப்பகுதி பிரபல தனியார் பாடசாலை மாணவன் காவல்துறையினரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த பகுதியில் பல நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் களவாடப்பட்டுவந்துள்ளன. இந் நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போதே குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

17 வயதான குறித்த மாணவனைப் பிடித்த காவல்துறையினர் திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய போது தாம் திருடும் மோட்டார் சைக்கிள்களை சங்கிலி களவாடும் கும்பலுக்கு கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளான்