Take a fresh look at your lifestyle.

மாதகல் கடற் பரப்பில் 150 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

 

வடதமிழீழம், யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்து காங்கேசந்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று சந்தேகத்திற்கு இடமாக படகொன்றில் பொதிகளை ஏற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று அவர்களை கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதாகிய இருவரிடமிருந்த சுமார் 150 கிலோக்கும் அதிகமாக கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதாகிய சந்தேக நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா குறித்து காங்கேசந்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழீழப்பிரதேசம் முழுமையாக சிங்கள இனவாத அரசின் இராணுவத்தாலும், கடற்படையாலும்  காவற்துறையினாலும் உளவுப்பிரிவினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அவர்களிற்கு தெரியாமல் கொலைகள் கொள்ளைகள் போதைபொருள் கடத்தல்கள் கற்பழிப்புக்கள் நடைபெறமுடியாதென்பது அனைவரிற்கும் தெரிந்த விடயமாகும். 

ஶ்ரீலங்கா பேரினவாத அரச இயந்திரம் எமது மக்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பதற்காக போதைப் பொருள் கடத்தைலையும் பாவனையையும் ஊக்குவிக்கின்றது. மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் விழிப்படையாதவரை இதற்கு விடிவே இல்லை