Take a fresh look at your lifestyle.

போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் முல்லையில் மாணவர்கள் ஏற்ப்படும் சிரமம் .!

வட தமிழீழம் முல்லைத்தீவு ஒலுமடு அம்பகாமம் பிரதேசத்திற்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படுவதில்லை இதனால் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் சிரமங்களை எதிர்கொள்வதாக ஒட்டுசுட்டான் உதவிப்பிரதேச செயலர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.

வட தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு, அம்பகாமம் கிராமத்திற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் இந்தப்பிரதேசத்தில் உள்ள 45 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில் சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்தப்பிரதேசத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவையினை முன்னெடுக்குமாறு கிராம மட்ட அமைப்புக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் சம்பந்தப்பட்ட தரப்புக்குத்தெரியப்படுத்தியிருந்தனர்.

இருப்பினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்ககைளும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் தற்போது 45 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப்பகுதியிலிருந்து பல்வேறு சிரங்களுக்கு மத்தியில் தமது கல்வியை தொடர வேணடிய நிலைய காணப்படுகின்றது.

இதனைவிட, இந்தப்பிரதேசத்தில் போக்குவரத்து வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் கூடுதலான சிறார்கள் பாடசாலைக்கல்வியை விட்டு இடைவிலகியுள்ள நிலமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் ஒட்டுசுட்டான் உதவிப்பிரதேசசெயலர் அவர்கள், இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த போது, இந்தபிரதேசத்திற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் பிரதேச மக்களால் கோரிக்ககைள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இதுவரை எந்தவித போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்