Take a fresh look at your lifestyle.

முல்லைத்தீவில் அபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

வட தமிழீழம்    முல்லைத்தீவு மாவட்டத்தின் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின்  காணிகளை விடுப்விப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வடமாகாண  சிங்கள இனவெறி ஆளுநர் ரெஜினோட் கூரே தலைமையில் இன்று காலை பத்து மணிக்கு  இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில்  தமிழரசு கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மாவை சேனாதிராசா தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான சி சிவமோகன் திருமதி சாந்திசிறிஸ்கந்தராஜா பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் ஆளுநரின் செயலாளர் திணைகள தலைவர்கள் முப்படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்