Take a fresh look at your lifestyle.

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான பல ஆதரங்கள் இருக்கின்றன.!

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

 

 

ஒருவர் மீது குற்றச்சாட்டு வரும்போது, பாதிக்கப்பட்டவர் தான் உண்மை இல்லை என்று சொல்ல வேண்டும். அமைச்சராக இருக்கும்போது ஜெயக்குமார் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?. உடனடியாக முதல்-அமைச்சர், அமைச்சர் ஜெயக்குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும். ஜெயக்குமார் ஆடியோவில் வரும் அனைத்தும் உண்மை.
என்னிடம் மேலும் ஆடியோக்கள் இருக்கின்றன. அதை வெளியிட்டால் நாடு நாறிவிடும். அதை நான் செய்யமாட்டேன்.
தவறு செய்யாமல் இருந்தால், பயப்பட தேவையில்லை. நான் உண்மையை தான் சொல்கிறேன். உண்மை கொஞ்சம் தாமதமாக தான் வெளியே வரும். ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ, வீடியோ என்னிடம் இருக்கிறது. அவர் திருந்த வேண்டும். அவருக்கு பிறந்த குழந்தையையும், அந்த பெண்ணையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சொத்தில் பங்கு தரவேண்டும்.
அந்த குழந்தைக்கும், பெண்ணுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். அப்படி நடந்தால் மேலும் என்னிடம் இருக்கும் ஆடியோக்களை வெளியிடுவேன். பயத்தினால் அந்த பெண் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதேபோன்ற தவறை ஜெயக்குமார் நிறைய செய்து இருக்கிறார். அதற்கான பட்டியல் என்னிடம் இருக்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அனைவரும் ஆஸ்பத்திரியில் இருந்தோம். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதாவுக்காக பூஜை செய்தார்கள். அப்போது அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடந்தது. அரவக்குறிச்சிக்கு சென்ற ஜெயக்குமார், அந்த பெண்ணை அங்கு வரவழைத்து அறை எடுத்து தங்கி இருக்கிறார்.
எல்லோரும் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் இருக்கும்போது, ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் அரவக்குறிச்சியிலும் மற்றும் திண்டுக்கல்லில் ‘கிரேண்ட் விவேரா’ என்ற ஓட்டலில் எண்.219 அறையில் தங்கியுள்ளார். இது குற்றச்சாட்டு அல்ல. உண்மை. ஜெயக்குமாரால் கட்சிக்கே களங்கம். ஜெயலலிதா இதுபோன்ற விஷயத்தில் ரொம்ப கோபப்படுவார்.
ஜெயக்குமாரை தவிர இன்னும் 2 பேரும் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை இப்போது சொல்ல முடியாது. இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. மாபியா கும்பல் பின்புலமாக இருந்து செயல்படுவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர் மாமியார் கும்பலில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்.
இப்போது வெளியாகி இருக்கும் ஜெயக்குமார் ஆடியோவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆடியோ விவகாரம் தொடர்பாக, ஜெயக்குமார் குரல் என்னுடையது அல்ல என்று சொன்னார், ஆனால் குழந்தை என்னுடையது இல்லை என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா?
கவர்னர் இந்த விஷயத்தில் தலையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுத்து அந்த பெண்ணையும், குழந்தையையும் ஜெயக்குமாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய தாயும் ஒரு பிரச்சினைக்காக ஜெயக்குமார் அலுவலகத்துக்கு சென்று சந்தித்து இருக்கிறார்கள். அப்போது 2 நாட்கள் கழித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல், 3 நாட்கள் கழித்து செல்போனில் அழைத்து ஜெயக்குமார் பேசி இருக்கிறார். அந்த பெண்ணின் தாய், ஊரில் இல்லாததால், அந்த பெண் மட்டும் ஜெயக்குமார் சொன்ன முகவரிக்கு சென்று இருக்கிறார்.
அங்கு அவருக்கு ஜூஸ் கொடுத்து இருக்கிறார். அதை குடித்த பெண் மயங்கிவிட்டார். அதன்பின்பு ஜெயக்குமார் தன்னுடைய வேலையை செய்து இருக்கிறார். விஷயம் அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வந்து சண்டை போட்டுள்ளார். தாலி கட்டி கல்யாணம் செய்து கொள் வதாக சத்தியம் செய்து இருக்கிறார்.
பாதிக்கப்பட்டவரே என்னிடம் இதை சொன்னார். குழந்தையின் டி.என்.ஏ.வையும், ஜெயக்குமார் டி.என்.ஏ.வையும் எடுத்து பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். இது நடக்க வேண்டும்.