Take a fresh look at your lifestyle.

இளைப்பாற வீதிக்கு வந்த யானை: பயத்துடன் பயணிகள்

 

வடதமிழீழம், வவுனியா, புளியங்குளம், பரந்தன் பகுதியில் நேற்று மாலை வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

வவுனியா, புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் உள்ள பரந்தன் பகுதியில் யானை ஒன்று வீதிக்கு வந்தது. இதனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள், வாகன சாரதிகள், வேலை முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தர்கள எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதேவேளை, அவ்வப்போது மாலை வேளைகளில் குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.