Take a fresh look at your lifestyle.

ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாத காணி தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்

 

தமிழீழம் ,வடமாகாணத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின் பிரச்சனை தொடர்பில் படை அதிகாரிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காணிகள் தொடர்பான திணைக்களங்க அதிகாரிகளையும் வடமாகாண சிங்கள ஆளுனர் அழைத்து 23.10.18 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்ட குரே தலைமையில் இடம்பெற்ற குறித் கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், விஜயகலா, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி படை கட்டளை அதிகாரி, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர், முப்படை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலை முழுமையாக பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு வடமாகாண ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.