Take a fresh look at your lifestyle.

கடத்தப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் உயிருடன் உள்ளார்.!

சிரியாவில் கடத்தப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் ஜும்பி யசூதா, தற்போது விடுவிக்கப்பட்டு உயிரோடிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிரிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜப்பானிய சுயாதீன ஊடகவியலாளர் ஜும்பேய் யசுதா (வயது-44), துருக்கியில் உயிரோடு உடல்நலத்துடன் இருப்பது தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ஜும்பேய் யசுதா விடுவிக்கப்பட்டு துருக்கியிலுள்ளதாக கட்டார் தெரிவித்த  தகவலை நம்புவதாக ஜப்பானிய அரசாங்கம் நேற்று தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஜப்பானிய அதிகாரிகள் துருக்கியின் அகதிகள் தங்கும் மையங்களுக்கு சென்று தேடியுள்ளனர்.

இந்நிலையில், சுயாதீன ஊடகவியலாளர்ஜும்பி யசூதா, உயிரோடு ஆரோக்கியமாக இருப்பது உறுதிப்படத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015 அம் ஆண்டு ஜுன் மாதம் சிரியாவில் அல் கைதா பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்டு 40 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.