Take a fresh look at your lifestyle.

தோட்டத் தொழிலாளர்களிற்கு ஆதரவாக கிளிநொச்சியில் போராட்டம்

 

தோட்ட தொழிலாளர்களிற்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க கோரி இன்று கிளிநொச்சியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித் போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டம் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பா ம உ சிறிதரன், வ.மா சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அடை மழையின் மத்தியிலும் குறித்த போராட்டம் தொடர்ந்து சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக இடம்பெற்றது.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர்