Take a fresh look at your lifestyle.

புதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்!

தமிழீழம் ,வடமாகாணத்தில் உள்ள காணிகள் பிரச்சனை தொடர்பில் படை அதிகாரிகளையும் பாராளமன்ற உறுப்பினர்களையும் காணிகள் தொடர்பான திணைக்களங்க அதிகாரிகளையும் வடமாகாண சிங்கள ஆளுனர் அழைத்து 23.10.18 அன்று மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது வட தமிழீழம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இனவாத அடக்குமுறை இராணுவத்தின் 68 ஆவது படைப்பிரிவின் 2 ஆவது படைமுகாம் அமைந்துள்ள மக்களுக்கு சொந்தமான காணி இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது.

ஒரு பகுதி மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது இந்த காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக படைத்தரப்பிற்கு 59 மில்லியன் பணம் தேவை என்பதை படையினர் இன்று மாவட்ட செயலத்தில் தெரிவித்துள்ளார்கள்.

சிங்கள ஜனாதிபதியிடம் இருந்து அந்த பணம் கிடைத்தவுடன் மிகவிரைவில் அந்த இடம்விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது