Take a fresh look at your lifestyle.

வட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்!

தமிழீழம் ,வடமாகாணத்தில் உள்ள காணிகள் பிரச்சனை தொடர்பில் சிங்கள படை அதிகாரிகளையும் பாராளுமன்ற  உறுப்பினர்களையும் காணிகள் தொடர்பான திணைக்களங்க அதிகாரிகளையும் வடமாகாண ஆளுனர் அழைத்து 23.10.18 அன்று மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது வட தமிழீழம் வட்டுவாகல் கோட்டபாய சிங்கள கடற்படை தளம் அமைந்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்றில் கோட்டபாய கடற்படை முகாம் அந்த காணிகள் அனைத்து கடற்படைக்கு உரியது என்று கடற்படையினர் தரப்பினால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தெட்டத்தெளிவாக மக்கள் பிரதிநிதிகள் மக்கள் விடயங்களை எடுத்து கூறியுள்ளார்கள்.
அதில் 408 ஏக்கர் தனியார்களுக்கு உரியது அதற்கான ஆதாரங்கள் இருக்கின்ற அதனால் அதனை விடுவிக்கவேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் தரப்பால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுனரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அந்த காணியில் மிகுதி காணிகளில் கடல்தொழில் வள பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான காணி மற்றும் இறங்குதுறை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இல்லை அதற்கும் அந்த இடம் தேவை என்பதை சுட்டிக்காட்டியபோது கடற்படையினர் முரண்டு பிடித்துள்ளார்கள்.

ஆனால் சிங்கள ஆளுனர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களை சிபார்சு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம் குறித்து இனப்படுகொலையின் முக்கிய மையம் மைத்திரியுடன்  தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.