Take a fresh look at your lifestyle.

வடக்கில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தீவிரம்!

கார்த்திகை மாதம் பிறந்தாலே வடக்கில் கிழக்கில் தமிழ் வாழ் இடங்களில் புலனாய்வாளர்களின் காண்காணிப்புக்கள் தீவிரமடைந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள இலங்கை அரசின் ஆட்சி மாற்றம் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டிருந்தாலும் மறுபுறத்தில் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள தமிழர்கள் மாவீரர் நாளுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கார்;த்திகை மாதத்தில் எவர் எவர் மாவீரர்களை நினைவு கூர கூட்டம் கூடுகின்றார்கள் மாவீரர் பெற்றோர்களுக்கு ஏதும் உதவிகள் வழங்கு கின்றார்களா என்ற கண்காணிப்பில் புலனாய்வாளர்கள் தீவிரமாக ஈடுட்டுள்ளார்கள்.

இதேவேளை வவுனியா,மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் படை புலனாய்வாளர்கள் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
சிறு கூட்டமாக இருந்தாலும் அதனை கண்காணிக்கும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ஆட்சி மாற்றமும் மக்கள் மத்தியில் ஒருவகை அச்சத்தை உண்டுபண்ணியுள்ளதுடன் கார்த்திகை மாதத்தில் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவிற்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.